புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2015

திமுக கூட்டணியில் விஜயகாந்த் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்: கலைஞர் பேட்டி


திமுக தலைவர் கலைஞர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர் :- மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசியதுபற்றி?

கலைஞர் :- அந்தச் சந்திப்பு பற்றி விஜயகாந்தின் வாயினால் எந்தக் கருத்தும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த நிலையில் நானும் அது பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

செய்தியாளர் :- தி.மு. கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி எந்த அளவில் உள்ளது?

கலைஞர் :- முக்கால் பகுதி பணிகள் முடிந்து விட்டன. 

செய்தியாளர் :- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களை உங்கள் கூட்டணியில் சேர்ப்பது பற்றிய ஆலோசனை இன்றைய கூட்டத்தில் நடத்தப் பட்டதா?

கலைஞர் :- தி.மு. கழகத்தின் சார்பில் கூட்டணி உருவாக்கும்போது, விஜயகாந்தும் அந்தக் கூட்டணியிலே இருக்கவேண்டுமென்ற விருப்பம்
எங்களுக்கு உண்டு. அது பற்றி அவர் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை.

செய்தியாளர் :- விஜயகாந்த் அவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

கலைஞர் :- நான் சொல்வதே அழைப்பு தான்.

செய்தியாளர் :- கடந்த ஒரு மாத காலமாக நாடாளுமன்றம் கூடி நடந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக் கட்டு பற்றி அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று அப்போதெல்லாம் வலியுறுத்தாத முதல் அமைச்சர் இன்றைக்கு நாடாளுமன்றம் முடிகிற நேரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கலைஞர் :- ஜல்லிக்கட்டு பற்றி இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். இன்றையதினம் எங்களுடைய இந்தத் தீர்மானம் வரப்போகிறது என்று எப்படியோ அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் கடிதம் எழுதி யிருக்கிறார்கள். அவர்களுடைய புலனாய்வுத் துறையினர் நன்றாக பணியாற்றியிருக்கிறார்கள். 

செய்தியாளர் :- திருநின்றவூரில் தண்ணீரில் தேங்கி நிற்க தி.மு.க. அரசுதான் காரணம் என்று ஓ. பன்னீர்செல்வம் இன்று அறிக்கை விடுத்திருக்கிறாரே?

கலைஞர் :- நாடாளுமன்றத்தில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி மத்திய அமைச்சர் கூறியதற்கு அவரோ, முதலமைச்சரோ என்ன கூறுகிறார்கள்? அதை விட்டு விட்டு இவர் ஏதோ பொய் கூறுகிறார். இவ்வாறு பதில் அளித்தார். திமுக கூட்டணியில் விஜயகாந்த் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்: கலைஞர் பேட்டி

ad

ad