புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2015

கால்பந்து அரைஇறுதி சுற்று: சென்னை–கொல்கத்தா அணிகள் இன்று மீண்டும் மோதல்


இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும்
அரை இறுதியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி, சென்னை அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தாலும், புனேயில் நடந்த அரை இறுதியின் முதல்சுற்றில் 0–3 என்ற கோல் கணக்கில் சென்னை அணியிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. அரை இறுதியின் முதல் சுற்றில் சென்னை அணி வீரர்கள் மென்டோஜா, ஜெஜெ, பெலிஸ்சரி ஆகியோர் கோல் போட்டு அசத்தினார்கள். தடை காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆட முடியாமல் போன இலனோ, வாடூ ஆகியோர் இன்றைய ஆட்டத்துக்கு திரும்புவது சென்னை அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும்.
கொல்கத்தா அணியை பொறுத்தமட்டில் இன்றைய ஆட்டத்தில் 4 கோல் வித்தியாசத்தில் வென்றால் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். அந்த அணி 3 கோல் வித்தியாசத்தில் ஜெயித்தால் பெனால்டி ஷூட் அவுட்டின் மூலம் தான் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். காயத்தால் அவதிப்படும் கேப்டன் போர்ஜா பெர்னாண்டஸ் இந்த ஆட்டத்தில் ஆடமாட்டார். அந்த அணி 10 கோல்கள் அடித்துள்ள இயான் ஹூமேவைத்தான் மலைபோல் நம்பி இருக்கிறது.
போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் மெட்டராசி நேற்று அளித்த பேட்டியில், ‘கடந்த ஆண்டில் நாங்கள் அரை இறுதி முதல் சுற்றில் 0–3 என்ற கோல் கணக்கில் கேரளாவிடம் தோற்றோம். ஆனால் 2–வது சுற்றில் 3–1 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தி ஒரு கோல் வித்தியாசத்தில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தோம். எனவே இந்த ஆட்டத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. கொல்கத்தா சிறந்த அணியாகும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கும். எனவே ஆட்டம் முடியும் வரை நாம் காத்து தான் இருக்க வேண்டும். கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஹபாஸ் நெருக்கடி மிக்க ஆட்டத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர்’ என்றார். கொல்கத்தா பயிற்சியாளர் ஹபாஸ் கூறும் போது, ‘தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவோம். ஆச்சரியம் அளிக்கும் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார்.

ad

ad