புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

யாரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி

யாழ்ப்பாணம் – உடுத்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தை அமைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுகளை எவராலும் மறக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – உடுமலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நினைவுத்துாபி தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் அமைக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனால் திறந்து வைக்கப்பட்ட போதிலும் அதில் உள்ளடக்கப்பட்ட வாசகங்கள் தற்போது மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் குறித்த நினைவுத் துாபியும் அதற்கு பின்னாலுள்ள அவர்களின் நினைவுகளும் இந்த இல்லத்தில் காணப்படுகின்றது.

அத்துடன் ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்கள் மாத்திரமல்ல அவர்கள் குடும்பத்தில் வாழ்ந்த ஒவ்வொரு போராளிகள் மற்றும் அவர்களின் கனவுகளையும் நினைத்தும் அருகிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை நினைத்தும் மக்கள் கதறியழுவதை சொல்ல முடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad