புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு: ஜெயலலிதாவுடன் வெங்கையா நாயுடு இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, இன்று
தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை வந்தார்

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி பி.அசோக் கஜபதி ராஜு சமீபத்தில் சென்னைக்கு வந்து, சேதம் அடைந்திருந்த விமான நிலையத்தை பார்வையிட்டார். மேலும், மழை வெள்ள சேதத்தை கடுமையான பாதிப்பு என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு சென்னைக்கு நேற்று வந்தார். சென்னையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான வேளச்சேரி, முடிச்சூர், கோட்டூர்புரம் உள்ளிட்ட சில இடங்களை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பார்வையிட உள்ளார்.

ஜெயலலிதாவுடன் ஆலோசனை

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் இன்று பகல் 12 மணி அளவில் தலைமைச் செயலகத்துக்கு வருகிறார். அங்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து மழை வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்துகள் சேதம், நிவாரணப் பணிகள், செலவுகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்துக்கு கூடுதல் தொகையை கேட்பதற்கான சந்தர்ப்பமாக இந்த சந்திப்பை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தக்கூடும். எனவே, இதுவரை கணிக்கப்பட்டுள்ள சேத மதிப்புகள் பற்றி மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரிகள் கூட்டம்

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து பேச இருப்பதையொட்டி, நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன், பொதுத்துறை செயலாளர் ஸ்வைன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக நேற்று மாலை சென்னை வந்த வெங்கையாநாயுடு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

பார்வையிடுகிறார்

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பாதிக் கப்பட்டு உள்ளன. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றி தகவல் அறிந்த பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டார். உடனடியாக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார். 

மத்திய நகர்புற வளர்ச்சி துறை மந்திரி என்ற அடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய வந்து உள்ளேன். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம் போன்ற பகுதிகளை ஆய்வு செய்வேன்.

முழு ஒத்துழைப்பு

பின்னர் தமிழக முதல்- அமைச்சரை சந்தித்து பேசுவேன். அதன் பிறகு மாநகராட்சி அதிகாரிகள், தமிழக அதிகாரிகளுடன் விவாதிப்பேன். எங்கள் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுவேன். 

மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்களை மீட்டு பாதுகாக்கும் பணியில் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டது. புனரமைப்பு பணிக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். எவ்வளவு சேதம் என கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.

சம்பந்தம் இல்லை

‘நேஷனல் ஹெரால்டு’ தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பியது தொடர்பாக அக்கட்சியினர் பாராளுமன்றத்தில் பிரச்சினை ஏற்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத்தில் போராட வேண்டிய விவகாரத்திற்காக பாராளுமன்றத்தில் போராடுவது நியாயமில்லை. இந்த வழக்கிற்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை. 

டெல்லி மேல்-சபையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

ad

ad