புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

விளையாட்டுத் துறையில் ஓர் வரலாற்றுப் பதிவை நிகழ்த்திய சுவிஸ் லுசேர்ன் இளம்பறவைகள் விளையாட்டுக் கழகம்

கடந்த (29.11.2015) ஞாயிறுஅன்று சுவிட்சர்லாந்து லுசேர்ன்நகரில் பிரமாண்டமாக நடத்தபட்ட யங் பேர்ட்ஸ் உள்ளரங்கஉதைபந்தாட்டசுற்றுப
போட்டி பலரையும் ஆச்சரியமூட்டும் வகையில் சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது இந்தசுற்றுப்போட்டியின் நிகழ்வுகள்மற்றும்இறுதியாட்டம்என்பவற்றைதீபம்தொலைக்காட்சிமுதன்முதலாக புலம்பெயர்தமிழர்வரலாற்றில்நேரடியாகஒலிபரப்புசெய்து சாதனைபடைத்தது
புலம்பெயர் தமிழர் வரலாற்றில் விளையாட்டு துறையில் இப்படியோரு நிகழ்வு  தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புவது நினைத்து கூட பார்க்க முடியாத சிரமமான  காரியமாகும்  எமது வசதி வாய்ப்புக்கள் ,பொருளாதரபலம்,தொழில்நுட்ப மேன்மை என்பவற்றை  வைத்துகொண்டு  தீபம் தொலைக்காட்சி இந்த  சாதனையை செய்துள்ளது முழு தமிழர் விளையாடடுலகத்தையுமே அசர வைத்துள்ளது .பாராட்ட படவேண்டிய செயல் இது  இந்த பெருமை  தீபம் சுவிஸ் பொறுப்பாளர்  செல்வா அவர்களுக்கு சேர வேண்டும் இது போன்ற  உன்னதமான மேற்கத்தவர்களோடு நெருங்குகின்ற ஆக்கபூர்வமான செயல்களை மென்மேலும் தீபம் முன்னெடுக்கும் முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்  இது போன்ற முன்மாதிரியான எண்ணங்களை துணிச்சலோடு  முன்னெடுத்த லுசேர்ன் இளம்பறவைகள் விளையாட்டுக் கழகத்தையும் நிச்சயம்  பாராடடி ஆகவேண்டும் விளையாடு வீரர்கள் மற்றும் கழங்களை ஊக்குவிக்குமுகமா க இதே சுற்றுப் போட்டியில் வெல்கின்ற முதல் மூன்று அணிகளுக்கும்  முறையே 1000.300.200,பிராங் பணப்பரிசுகளை வழங்கி கௌரவித்தமை ஒரு  முன்மாதிரி எடுத்துக்காட்டாகும் .இது போன்ற இன்னும் பல சிந்தனை செயல்பாடுகளை அவர்கள் முன்னேடுப்பார்களேன நம்புகிறோம்

ad

ad