புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

வெள்ளைக்கொடி விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- மக்ஸ்வெல் பரணகம

இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு தொடர்பில் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென
ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளைக்கொடி விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வின் முடிவில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளின் தளபதிகளான நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தின் முடிவில் சரணடைந்திருந்தனர். இவர்கள் அனைவரும் சிறிலங்கா இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சனல் 4 ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் இதில் நாம் தவறிழைக்கவில்லை என தெரிவித்த போதும், சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சனல் 4 வின் காணொளியை பொய் என்றும் கூறவில்லை. உண்மை என்றும் கூறவில்லை. நன்கு ஆராயப்படவேண்டும் என்றே கூறி வருகின்றோம். வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து மக்களிடமிருந்து முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்று வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக் குழுவினாலும், எல்.எல்.ஆர்.சி.னாலும் இந்த வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தும் உள்ளோம். தவறிழைத்தவர்கள் இனங்காணப்பட்டு தனிநபர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் கூறினார்.

ad

ad