புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2015

சிறுவர் துஷ்பிரயோகம், அடக்குமுறைக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை!- அமைச்சர் விஜயகலா


சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தின் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்பதோடு சிறமிகளான வித்யா மற்றம் சேயா ஆகியோரின் படுகொலைக்கு எதிராகவும் விரைவில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினரை தாம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் இடம்பெற்ற கோர யுத்ததினால் வடக்கு பிரதேசங்களில் அநாதை இல்லங்களில் வாழும் பெற்றோரை இழந்த சிறுவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.
எனவே இவர்கள் தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்றத்தில் சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சு,நீர்பாசன நீர் வள முகாமைத்துவ அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad