புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

தொடரும் துன்பியல் சம்பவங்கள்: சவுதியிலிருந்து மற்றுமொரு சடலம்

தொடரும் துன்பியல் சம்பவங்கள்: சவுதியிலிருந்து மற்றுமொரு சடலம்
சிறப்பான எதிர்காலத்திற்காய் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள்
, உயிரிழப்புக்கள் என்பன அண்மைக்காலமாக அதிகளவில் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், மற்றுமொரு துயரச்சம்பவம் பதிவாகியுள்ளது.
அவிசாவளை – புவக்பிட்டிய – பிரகதிபுர பகுதியில் வசித்த ஜீ.கிரிஷாந்தி 2012 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிறந்த இவர் சவுதி சென்றபோது, இவருக்கு வயது 15.
மருதானையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகவே கிரிஷாந்தி வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த வருடம் மே மாதம் 6 ஆம் திகதி கிரிஷாந்தி உயிரிழந்ததாக தகவல் கிடைத்திருந்தும் அவரது உடலை இலங்கைக்குக் கொண்டு வர 7 மாதங்களாகியுள்ளன.
தமது மகள் தற்கொலை செய்துகொண்டதாக மே மாதம் 6 ஆம் திகதி பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தொலைபேசியில் வீட்டிலுள்ளவர்களுடன் உரையாடியுள்ளார் கிரிஷாந்தி.
இதன்போது, மே மாதமே இலங்கைக்கு வருவதாக கிரிஷாந்தி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
கிரிஷாந்தியின் பெற்றோரின் கூற்றுக்கு அமைய, அவர் வெளிநாடு சென்ற சந்தர்ப்பத்தில் 16 வயதைப் பூர்த்தி செய்திருக்கவில்லை என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் கொள்கைக்கு அமைய, 16 வயதுக்குக் குறைந்த அனைவரும் சிறார்களாகக் கருதப்படுவதுடன், சிறார்கள் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வது சட்ட விரோதமானதாகவும் கருதப்படுகின்றது.
சிறிது காலத்திற்கு முன்னர் சவுதியில் கொலை செய்யப்பட்ட ரிசானா தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.
சவுதிக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ள இலங்கைப் பெண் ஒருவரை, அந்நாட்டில் கல்லெறிந்து கொலை செய்யவும் அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.
எமது தேசத்தின் கல்வியறிவற்ற வறிய குடும்பத்துப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்நோக்கும் இன்னல்கள் சொல்லிலடங்காதவை.
எம் மத்தியில் மத்திய கிழக்கிற்கு செல்லும் பெண்களின் இரத்தக்கறை தோய்ந்த துன்பியல் அனுபவத்தை மீண்டும் நினைவுபடுத்திச் சென்றுள்ளார் கிரிஷாந்தி.

ad

ad