புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகபடையை களமிறக்குமாறு ஜெர்மனியிடம் அமெரிக்கா வலியுறுத்தல்


ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகமான படையை களமிறக்குமாறு ஜெர்மனியை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. 

சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் படை வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. பாரீஸ் தாக்குதலை அடுத்து தாக்குதலானது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெர்மனி பாராளுமன்றமும் தாக்குதலுக்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து ஜெர்மனியும் தாக்குதலை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. முதல்கட்ட ஜெர்மன் படையானது துருக்கி சென்று உள்ளது. 

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகமான படையை களமிறக்குமாறு ஜெர்மனியை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு படை தலைமையகம் ஜெர்மனிக்கு கடிதம் எழுதிஉள்ளது. 

ஜெர்மனி படையை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றது என்று உறுதிப்படுத்தி உள்ள ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவின் கோரிக்கையானது பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. இருப்பினும் கடிதத்தின் முழுவிபரம் வெளியிடப்பட வில்லை. பிரான்ஸ் படைக்கு பாதுகாப்பாக நின்று போர் புரியும் வகையில் போர் விமானங்களையும் ஜெர்மனி அனுப்பிஉள்ளது. அடுத்தக்கட்ட ராணுவ வீரர்கள், ஜனவரி மாதம் அனுப்பட உள்ளனர்

ad

ad