புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2016

அ.தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் முழு விவரம்




அ.தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* தமிழகம் குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் கனவுகள் அனைத்தும் நிறைவேற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து இந்த பொதுக்குழு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கத்தையும் வாழ்த்துக் களையும் தெரிவிக்கிறது.

* அ.தி.மு.க. தலைமைக்கு இன்னல் வந்த போது தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்த 263 தொண்டர்களுக்கும் வீரவணக்கம். அவர்கள் எந்நாளும் நினைவில் வாழ் வார்கள். இந்த தொண்டர் களின் மகத்தான தியாகத்தை எண்ணி அ.தி.மு.க. தலைமை கண்ணீர் சிந்துகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக 7-வது முறையாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் அமைப்பு தேர்தல்கள் மூலம் பல்வேறு நிர்வாக நிலைகளுக்கும் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் செயல்பட்டு வருவதை முழுமையாக ஏற்று அங்கீகரிப்பதோடு கட்சி அமைப்பு தேர்தல்களை சிறப்புற நடத்திய முதல்- அமைச்சருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

* தமிழகத்தின் முதல்- அமைச்சராக 5-வது முறையாக பதவி ஏற்றிருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக் கிறோம்.

* முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை வழங்கிய ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரி விக்கப்படுகிறது.

* தமிழக¢த்தின் தலைநகர் சென்னை யிலும், மாநிலத்தின் பிறபகுதிகளிலும் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழை வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு நிவாரண பணிகளை இரவு பகலாக கண்காணித்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக வழங்க பாடுபட்ட முதல்- அமைச்சருக்கு பொதுக்குழு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

* 2012-ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயல் பாதிப்புக்கு பெரும் இழப்பு குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிய போதும் தமிழக அரசு கேட்டிருந்த தொகையில் மிக குறைவான தொகையையே பெயரளவுக்கு அப்போதைய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு தமிழகத்துக்குஅளித்து மக்களை வஞ்சித்தது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலு மாக இழந்திருக்கிறார்கள். குறிப்பாக ஏழை, எளிய, விவசாய, மீனவ மக்கள் பெரும் பொருட்சேதத்துக்கு ஆளாகியுள்ளனர். மாநில அரசு பலத்த உள்கட்டமைப்பு சேதத்தை சந்தித்திருக்கிறது. 25912.45 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்துக்கு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை புள்ளி விவரங்களோடு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார். பிரதமரிடமும் நேரடியாக விளக்கி கூறி இருக்கிறார். எனவே முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை மத்திய அரசு முழுமை யாக வழங்கிட வலியுறுத்து கிறோம்.

* தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து துன்புறுத்தி வருவதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வண்ணம் கைது செய்து சிறையில் அடைத்து படகுகளை பறிமுதல் செய்து மனிதாபிமான மற்ற வகையில் செயல்பட்டு வருவதை தடுத்து நிறுத்திட மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அளவில் உடனடியாக பேச்சுவார்த்தை களை தொடங்க வலியுறுத்து கிறோம்.

* சங்க காலம் முதல் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு தமிழகத் தின் காளை மாடுகளுக்கு செய்யப்படும் சிறப்பே தவிர மிருக வதை அல்ல என்ற பண்பாட்டு உண்மையை ஏற்று ஜல்லிக்கட்டு விழா தொடர்ந்து நடைபெற மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி முதல்- அமைச்சர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று ஆவண செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

* அனுமதி, வளம், வளர்ச்சி என்ற தன்னுடைய கொள்கை முழக்கத்தில் உறுதியாக நின்று பல்வேறு இடர்பாடுகளுக்கு இடை யிலும் தமிழகத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்தி நாடே வியந்து போற்றும் வண்ணம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் துறை தோறும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு வித்திட்டு தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்று கொண்டு இருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கி றோம்.

* தமிழகத்தில் பெண்களின் தேவைகளையும், உணர்வு களையும், அவர்களின் மாண்¬பயையும், மரியாதை யையும் போற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறி முகம் செய்து மகளிர் முன் னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி வரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து மகிழ்கிறோம்.

*. 2011 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியின் படி தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றியதற்கும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி 2,42,160 கோடி ரூபாய்க்கு முதலீடு வழிவகை செய்தமைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.

* முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ந் தேதி இளைஞர் எழுச்சி நாள் என்று ஆண்டு தோறும் தமிழக அரசால் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருக்கிறார். அப்துல்கலாம் நினைவை போற்றும் விதமாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவ - மாணவியர் நலன் ஆகியவற்றுக்கு பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் என்று ஆணையிட்டு இருக் கிறார். அப்துல்கலாம் திருஉடல் அடக்கம் செய்யப் பட்டுள்ள இடத்தில் நினைவு மண்டபம் அமைக்க தேவையான இடத்தையும் வழங்கியுள்ளார்.

அறிஞர்களையும் ஆற்ற லாளர்களையும், தேச பக்தர் களையும் போற்றி வணங்கு வதில் அனைவருக்கும் எடுத்துக் காட்டாக திகழும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா , அப்துல்கலாம் அவர்களின் நினைவை போற்ற மேற் கொண்டு இருக்கும் இந்த சிறப்பான நடவடிக்கைகளை உளமாற பாராட்டுகிறது.

* தமிழ்நாட்டில் அரசியல் நாகரீகத்தை சீர்குலைத்த திலும் தனிமனித துதியை வளர்த்ததிலும் ஒரு குடும் பத்தின் பல நூறு நச்சு வேர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, மாநிலத்தின் இயற்கை வளங்கள் மற்றும் நிதி ஆதாரங்களை சுரட்டுவதிலும் தீய சக்தியின் தலைமையிலான தி.மு.க.வின் பங்கு 100 சதவீதமானது.

முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த நில அப கரிப்பு, மணல் கொள்ளை, ரேசன் பொருட்கள் கடத்தல், கலைதுறை கட்டுமானத்துறை, ஊடகத்துறை போன்ற அனைத்து துறைகளையும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து நடத்திய அராஜக வன்முறை வெறியாட்டம் போன்றவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தமிழக மக் களிடம் வீதி வீதியாக சென்று மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தி.மு.க. இன்று தள்ளப்பட்டு இருப்பதே இதற்கு சாட்சி.

* இலங்கையில் லட்சக் கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, அது குறித்து உண்மை நிலவரங்கள் மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக 2 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்திய கட்சி தீய சக்தியின் தி.மு.க. கட்சி.

மத்திய அரசில் வலிமை யான இடத்தைப் பெற்று இருந்த போதிலும் ஈழத்தமிழர் களை காப்பதற்கு அந்த வாய்ப்ப்பை பயன்படுத்தாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற உலக வரலாறு கண்டிராத ஒரு மாபெரும் ஊழலின் மூலம் இந்திய நாட்டிற்கும் தமிழ் இனத்திற்கும் தீரா பழியை ஏற்படுத்திய கட்சி தீய சக்தியின் தி.மு.க. கட்சி.எப்போது வாய்ப்பு கிடைக்கும், மீண்டும் மாநிலத் தையும் தேசத்தையும் சுரண்டி செல்வத்தை குவிக்கலாம் என்று நேரம் பார்த்து தி.மு.க. காத்திருப்பதை அங்கே அரங்கேறி வரும் குடும்ப சண்டையின் கோர முகம் உலகுக்கு உணர்த்துகிறது.

மக்களுக்கு ஏதேனும் இடர்பாடு வந்து விடாதா? அதன் மூலம் தங்களது பாவச் செயல்களை எல்லாம் மக்கள் மறந்து விட வழி ஏற்பட்டு விடாதா? மீண்டும் அராஜக ஆட்சி ஒன்றை ஏற்படுத்தி தங்களது பெட்டகங்களை நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து விடாதா? என்று எதிர்பார்த்து தீய சக்தி தி.மு.க.வின் பல்வேறு நச்சுக்கிளைகள் தொடர்ந்து முயற்சித்து வருவதை விழிப்புடன் கண்காணித்து தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக் கிறது.
மக்களால் நான், மக்களுக் காகவே என் வாழ்வு அர்ப் பணிக்கப்பட்டிருக்கிறது என்று தவ வாழ்வு வாழ்ந்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா  மட்டும்தான். தீய சக்தியின் நவீன வடி வங்கள் அனைத்தையும் தகர்த் தெறியும் ஆற்றலைப் பெற்ற வர் இத்தகைய சிறப்புக் குரிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா  தலைமையில் முழு மூச்சுடன் செயல்பட்டு மக்களின் ஆட்சியை நிலை நிறுத்திட இந்த பொதுக்குழு சபதம் ஏற்கிறது.

* அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய வழிகாட்டுதல் காரணமாக அ.தி.மு.க. தேர்தல் களங் களில் வெற்றி மேல் வெற்றியை ஈட்டி வருகிறது.
அ.தி.மு.க. வெற்றி ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு நேரத்திலும் மிக சரியான முடிவுகளை எடுத்து நம்மை வழி நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க. வரலாற்றில் புதிய வெற்றிச் சிகரத்தை உருவாக்கி தந்தவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா.

2014-ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தமிழகம் - புதுச்சேரி உள்ளிட்ட 40 மக் களவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. தேர்தல் களத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வகுத்த பிரசார வியூகம் காரணமாக தமிழகத்தில் அ.தி.மு.க. 37 இடங்களில் மகத்தான வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முழு முதற்காரணம் ஜெயலலிதா வின் அரசியல் வியூகமும் அயராத உழைப்பும், மக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருக்கும் மாபெரும் செல்வாக்குதான் என்பதை இந்த பொதுக்குழு பெருமிதத்துடன் நினைவு கொள்கிறது.

இத்தனை பெரிய வெற்றியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன் உழைப்பின் மூலம் அடைந்ததன் விளை வாக நாடாளுமன்ற மக்க ளவையில் 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. இன்று விளங்குகிறது. இந்த சாதனைக்கான அனைத்து சிறப்பும், புகழும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வையே சாரும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ad

ad