புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2015

ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவரின் தடைக்காலத்தில் மாற்றமில்லை

87085627_platini_getty-720x480

ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவர் மைக்கல் பிளாட்டினியில் தடைக்காலத்தில் மாற்றமில்லை என விளையாட்டுக்களுக்கான
சுயாதீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி சர்வதேச கால்பந்து சபையின் றெநிமுறைக்குழுவினால் பிளாட்டினிக்கு வழங்கப்பட்ட 90 நாட்கள் பணி இடைநீக்கம் தற்காலிகமாக குறைக்க முடியாது எனவும் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிவரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையில் ஐரோப்பிய கால்பந்து சபைத் தலைவர் மைக்கல் பிளாட்டினி மற்றும் சர்வதேச கால்பந்து சபைத் தலைவர் செப் பிளாட்டர் ஆகிய இருவருக்கும் இடையில் எழுத்துமூல ஆவணம் எதுவும் இன்றி சுமார் 1.35 யூரோ பணம் கைமாறப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதன்காரணமாக சர்வதேச கால்பந்து சபையின் நெறிமுறைக்குழுவால் இருவருக்கும் 90 நாட்களுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் தன்மீதான பணி இடைநீக்கத்தை குறைக்க வேண்டும் என பிளாட்டினியும் பணி இடைநீக்கத்தை வாழ்நாள் தடையாக்க வேண்டும் என நெறிமுறைக்குழு புலனாய்வாளர்களாலும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad