புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2015

நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை பிரதமர் அலுவலகத்தினால் வெளியீடு


இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 33 ரகசிய கோப்புகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 1945–ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் சிக்கிய சம்பவம் இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது. அந்த விபத்தில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டாலும், அதுபற்றிய மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

அது தொடர்பான ரகசிய ஆவணங்களை மத்திய அரசு பாதுகாத்து வருகிறது. மேற்கு வங்காள மாநில அரசின் பாதுகாப்பில் இருந்த 64 ரகசிய கோப்புகளை, கடந்த செப்டமர் மாதம் 18–ந் திகதி வெளியிட்டடப்பட்டது. அதேபோன்று மத்திய அரசின் பாதுகாப்பில் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளையும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
நேதாஜி குடும்பத்தினரும், நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தினர். நேதாஜி குடும்ப உறுப்பினர்கள் 35 பேர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த அக்டோபர் மாதம் 14-ம் திகதி அவரது இல்லத்தில் சந்தித்தனர். நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடும் பணி அவரது பிறந்தநாளான ஜனவரி 23-ந் திகதியன்று தொடங்கும் என பிரதமர் மோடி அப்போது அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் பாதுகாக்கப்படுவந்த 58 ரகசிய கோப்புகளில் 33 கோப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த கோப்புகள் அனைத்தும் மத்திய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதர கோப்புகளும் படிப்படியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad