புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

சலுகைகளுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விலைபோகாது : சிறிநேசன் எம்.பி

சலுகைகளுக்காக விலைபோவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஆண்டு இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விலை போயிருந்தால் தற்போது நாடாளுமன்றத்தில் பல அமைச்சுக்களைப் பெற்றிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், தங்களுக்கென்று சில பிடிமானங்கள் இருப்பதாகவும் அதிலிருந்து தாம் வழுக முடியாது எனக் கூறியுள்ளார்.  சர்வதேசத்தின் பார்வை இலங்கையின் மீது விழுந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி பற்றிக் குறிப்பிடுகின்ற அரசாங்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாட்டினால் 2016 ஆம் ஆண்டில் இனப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனப் பிரச்சினைக்கான தீர்வு காணப்படுகின்ற பட்சத்தில் அதன்பின்னர் தமது செயற்பாடுகள் தொடர்பில் கொள்கைகளை வகுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சலுகை அரசியலுக்காகச் செயற்படுவது அல்ல எனவும் இக்கூட்டமைப்பு கட்டுக்கோப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை தாறுமாறாக விமர்சிக்கக்கூடிய நிலையில் மற்றவர்கள் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களுடன் இணைந்து நியாயமாக, நிதானமாக சேர்ந்து ஒற்றுமையுடன் பயணிக்கத் தாயாராகவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் உள்ளிட்ட எவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை, சீண்டிப் பார்பதை, நோண்டிப் பார்ப்பதை, தவிர்க்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad