புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

செவ்விந்தியர்களுக்கும் திபெத்தியர்களுக்கும் உண்டாக்கப்பட்ட நிலையே தமிழர்களுக்கு: ஐங்கரநேசன், சுரேஷ்


வடமாகாணத்தில்  தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் சூழலியல் ஏகாதிபத்தியத்தின் ஊடாகவும், இராணுவ மயப்படுத்தல் ஊடாகவும்  அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், செவ்விந்தியர்களுக்கும், பல ஸ்தீனியர்களுக்கும், திபெத்தியர்களுக்கும் உண்டாக்கப்பட்ட துயர் நிலை மிக விரைவில் தமிழர்களுக்கும் உருவாக்கப்படும் என்பதே உன்மையாகும்.
வனங்களை பாதுகாக்கிறோம். பறவைகள், விலங்களுக்கான சரணாலயங்களை அமைக்கிறோம். என்ற பெயரில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலம் வனபரிபாலனசபையினால் விழுங்கப்படுகின்றது. இதுவே சூழலியல் ஏகாதிபத்தியம் என்பதுடன் இந்த சூழலியல் ஏகாதிபத்தியமே ஒரு காலத்தில் செவ்விந்தியர் களை நாடற்றவர்களாக மாற்றியது.
மேற்கண்டவாறு வடமாகாணசபை சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்று யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் தி மாற்றம் பவுண்டேஷன் அமைப்பினால் நடத்தப்பட்ட “நிலமும் நாங்களும்”என்ற தலைப்பிலான கருத்தாடல் நிகழ்வின் போதே மேற்படி  விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பாக மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டுகையில், வடமாகாணத்தில் 5
மாவட்டங்களிலும் குறிப்பாக முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள், மன்னார் மாவட்டத்தில் வங்காலை, யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளம் போன்றவற்றில் வனங்களை பாதுகாக்கிறோம். பறவைகள், விலங்குகள் சரணாலயங்களை அமைக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலத்தை வனபரி பாலன சபை தங்களுக்குரியதாக எடுத்துக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான ஒரு சூழலியல் ஏகாதிபத்தியமே செவ்விந்தியர்களுக்கு நடந்தது. அவர்கள் காலப்போக்கில் நிலமற்றவர்களாக, நாடு அற்றவர்களாக துயர் நிலையில் விடப்பட்டதையே வரலாறு சுட்டுகின்றது.
அவ்வாறான நிலையே வடக்கிலும் நடைபெறுகின்றது. இங்கே வனபரிபாலன சபை தமக்குரிய நிலங்களாக காட்டும் பல நிலங்கள் எங்கள் மக்களுடைய உறுதிக்காணிகள், நீண்டகாலமாக அந்த நிலங்களில் வாழ முடியாமல் இருந்த நிலையில் அது பற்றைக்காடுகளாக மாறிவிட்டிருக்கின்றது. என சுட்டிக்காட்டியிருந்தார். தொ டர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டுகையில்,
வடமாகாணத்தில் பௌத்தர்களே இல்லாத நிலையில் பௌத்த ஆலய ங்களும், சிங்கள மக்கள் முன்னர் வாழாத இடங்களில் சிங்கள குடியேற்றங்களும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது. எமக்கு கிடைக்கப்
பெற்ற தகவலின் அடிப்படையில் வடக்கில் போருக்குப் பின்னர் 20 ஆயிரம் வரையிலான சிங்கள
குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான குடியேற்றங்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன எனில் முழுமையாக இராணுவமயப்படுத்தலின் ஊடாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எவ்வாறு பலஸ்தீனியர்களும், திபெத்தியர்களும் இராணுவமயமாக்கலின் ஊடாக விழுங்கப்பட்டார்களோ அவ்வாறு தமிழ் மக்களும் விழுங்கப்படும் அபாய நிலையே நெருங்கிக் கொண்டிருக்கின்றது என சுட்டிக்காட்டினார்.

ad

ad