புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

பாரிஸ்: உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்!

பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில்,  உலக தலைவர்கள் எல்லாம் குவிந்திருந்தாலும், அங்கே அனைவரின் கவனத்தையும்
ஈர்த்திருப்பது,  அங்கே வித்தியாசமான விதத்தில் லட்சகணக்கான மக்கள் தங்கள் காலணிகளை வைத்து நடத்திய போராட்டம்தான். 

சென்ற மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலால்,  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே நடைபெறுகிறது இந்த மாநாடு. பேரணி,  பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டதால்,  அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள்,  தங்கள் ஷூக்களை சாலையில் விட்டுச் சென்றனர். ஐநா சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் போப் ஃப்ரான்சிஸ் ஆகியோரும்,  தங்கள் சார்பாக ஷூக்களை அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் விட்டு சென்ற ஷூக்களின் எடை சுமார் 4 டன் எடை.
1.2 கிலோமீட்டர் தூரம் மக்கள் மனித சங்கிலி அமைத்து,  தங்கள் கோரிக்கைகளை வைத்தனர். தீவிரவாத தாக்குதல் நடந்த பேட்டாக்ளான் ஹால் முன் மட்டும் மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஒரு இடைவேளை விடப்பட்டது.

உலகெங்கும் நியூயார்க், லண்டன், கென்யா, ரியோ டி ஜனரியோ  சிட்னி போன்ற இடங்களிலும் மக்கள் திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பனிக்கரடிகள் போலவும் பெங்குவின் போலவும் வேடமிட்ட மக்கள்,  உருகிக் கொண்டிருக்கும் வட துருவத்தின் பனிக்கட்டிகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தினர்.
புவி வெப்பமையமாதல்தான் இந்த மாநாட்டின் கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தாலும்,  அதனை நடைமுறைப்படுத்தவது அவ்வளவு எளிதானது அல்ல. அதிகமான வெப்பத்தால் தீவு நாடுகள் பலவும் மூழ்கும் அபாயம் உள்ளது. உலகின் பல இடங்களில் இயற்கை சீற்றங்களும், சீரில்லாத மழை பொழிவும் ஏற்பட்டு விவசாயத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும்.

அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்திட்டத்தை கொடுக்க வேண்டும். சீனா 2030க்குள் முழுமையாக கார்பன் அளவை குறைத்துக் கொள்வதாக கூறியிருக்க, இந்தியா நடைமுறைக்கு சாத்தியமான 30 % அளவை குறைத்து கொள்ள ஒப்புகொண்டுள்ளது.
வெறும் சட்டங்கள் இயற்றுவதால் மட்டும் மாற்றத்தை கொண்டு வர இயலாது, தனி மனிதனிடம் தொடங்கி மின்சாரம், எரிவாயு சேமிக்கவும், முடிந்த அளவுக்கு மாசுபடுத்தாத சூரிய சக்தி அல்லது இயற்கை எரிவாயு பயன்படுத்துவது நல்லது.

ad

ad