புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2016

இன்று அதிகாலை நெல்லை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 10 பேர் பலி



காரைக்காலில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு குளிர்சாதன வசதியுடைய தனியார் ஆம்னி பஸ் கேரள மாநிலம் திருவனந்த புரத்திற்கு புறப்பட்டது.
அந்த பஸ்சில்40 பயணிகள் இருந்தனர்.

 பஸ் இன்று அதிகாலை 5 மணி அளவில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த நெல்லை-நாகர்கோவில் நான்கு
வழிச்சாலையில் உள்ள பிலாக்கொட்டை பாறை என்ற இடத்தில் அப்போது திடீரென பஸ் ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவரில்  மோதியது. இதனால் ஆம்னி பஸ் கவிழ்ந்து ரோட்டின் இடதுபுறத்தில் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.டிரைவர் தூங்கியதால் 
சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 
10 பேர் பலி ( படங்கள் )

நெல்லை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது.


வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் பஸ், திருநெல்வேலி அருகே பனக்குடியை அடுத்து பிளாக்கோட்டை பாறையில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட10 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

  டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தால் நெல்லை-நாகர்கோயில் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை நேரம் என்ப தால் பஸ்சில் இருந்த பயணி கள் தூங்கி கொண்டிருந் தனர். திடீரென பஸ் உருண்டு ஓடுவதை கண்டு அவர்கள் அலறினர். பஸ் இழுத்து செல்லப்பட்டதால் முற்றிலும் சேதம் அடைந்தது. இடிபாடுகளில் பஸ்சில் இருந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந் தனர்.பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் பலத்த காயங் களுடன்  மரண ஓலம் எழுப்பினர்.  அவர் களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அருகே உள்ள பெட் ரோல் பங்க்கின் ஊழியர் கள் விரைந்து வந்தனர். இது குறித்து வள்ளியூர் போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 30 பேரை ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக இறந் தார். இதனால் பலியானோர்  எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர் களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இன்று அதிகாலை நெல்லை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 10 பேர் பலி

ad

ad