புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2016

14 பந்துகளில் 50 ரன்கள் விளாசி முன்ரோ சாதனை

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வீரர் 28 வயதான காலின் முன்ரோ 14 பந்துகளில் 50 ரன்களை எடுத்து வேடிக்கை காட்டினார். இதன் மூலம், 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதத்தை எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இந்திய வீரர் யுவராஜ்சிங், 2007-ம் ஆண்டு உலக கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்துகளில 50 ரன்களை கடந்ததே உலக சாதனையாக நீடிக்கிறது.

* இந்த ஆட்டத்தில் கப்தில் 19 பந்துகளிலும், முன்ரோ 14 பந்துகளிலும் அரைசதத்தை தொட்டனர். ஒரே ஆட்டத்தில் இரண்டு பேட்ஸ்மேன்கள் 20 பந்துகளுக்குள் அரைசதம் அடிப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

* 143 ரன்கள் இலக்கை 10 ஓவர்கள் மிச்சம் வைத்து எட்டியதும் சாதனை தான். 120 ரன்களுக்கு மேலான இலக்கை, இவ்வளவு வேகத்தில் துரத்திப்பிடித்த அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெறுகிறது. இந்த வகையில் 2007-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 130 ரன்கள் இலக்கை 11.3 ஓவர்களில் எட்டிப்பிடித்ததே சாதனையாக இருந்தது.

* நியூசிலாந்து தரப்பில் இந்த இன்னிங்சில் மொத்தம் 12 சிக்சர்கள் பறக்க விடப்பட்டன. 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் நியூசிலாந்தின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு 5 முறை தலா 11 சிக்சர்கள் அடித்திருந்தது. 

ad

ad