புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2016

140 ஆண்டு கால சாதனை: ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் தோனி

சிட்னியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 198 ரன்களை வெற்றி இலக்காக
வைத்த போது, இந்திய அணி வெற்றி பெறுவது சற்று சிரமமாகவே தோன்றிது. ஷேன் வாட்சன் 74 பந்துகளில் 124 ரன்களை குவித்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தார்.
இந்தியாவை பொறுத்த வரை விராட் கோலியும் (50) ரோகித்தும் (52) தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்தனர். இதனால், 140 கால ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் செய்து  இந்திய அணி  சாதனை படைத்துள்ளது. 

கடந்த 140 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எந்த அணியும் வொயிட் வாஷ் செய்தது கிடையாது.
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வொயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் தோனி என்ற பெருமையும் கிடைத்துள்ளது. 

டி20 தொடரில் ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து 3 அரை சதம் அடிப்பது இதுதான் முதல் முறை. இந்தியாவின் விராட் கோலி இந்த தொடரில் 90,59,50 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். விராட் கோலியின் சராசரி 199, ஸ்ட்ரைக் ரேட் 160.48

ரோகித் சர்மா டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏனைய இரு வீரர்கள் விராட் கோலியும் சுரேஷ் ரெய்னாவும். 

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை  விராட் கோலி பெற்றுள்ளார். மொத்தம் 8 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 5 அரை சதங்களும் 2 சதங்களும் அடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 1985-86 வது ஆண்டுகளில் சுனில் கவாஸ்கர் 7 அரை சதங்கள் அடித்துள்ளார்.
முதல் 6 ஓவர்களில் இரு அணிகளும் சேர்த்து 131 ரன்கள் குவித்துள்ளன. இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இணைந்து 126 ரன்கள் அடித்ததே அதிகபட்சம். 

சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி இவ்வளவு ரன்கள் குவித்தது இதுதான் முதன் முறையும். அதையும் இந்திய அணி தவிடுபொடியாக்கி 140 ஆண்டுகளில் முதன் முறையாக வொயிட் வாஷ் என்றால் என்ன? என்று ஆஸ்திரேலியர்களுக்கு காட்டியுள்ளது. 

ஷேன் வாட்சன் சாதனை ஒரு பார்வை

ஷேன் வாட்சன் 3 வகையான கிரிக்கெட் போட்டியிலும் சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். டி20 போட்டியில் 124 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவீரர் என்ற பெருமையும் வாட்சனுக்கு கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் வீரர் மொகம்மத் ஷேஷாத் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்த மாத இறுதியில் 118 ரன்கள் அடித்ததே டி20யில் அதிகபட்ச ரன்களாக இருந்தது. 

கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு வாட்சன் டி20 போட்டியில் முதன் முறையாக 70 ரன்களை கடந்துள்ளார். அப்போது இலங்கை அணிக்கு எதிராக 70  ரன்கள் அடித்ததே அதிகபட்சம் 

இதற்கு முன் டுப்லெசி மற்றும் திலகரத்னே மட்டுமே டி20 போட்டியில்  சதமடித்த பிற கேப்டன்கள். இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையும் வாட்சனுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன் கிறிஸ் கெயில் 2010ஆம் ஆண்டு 98 ரன்கள் அடித்திருந்தார். 

ad

ad