புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2016

இராணுவ கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்: 20 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்!

பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாவது இணைப்பு
பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தின் உள்ளே நிழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரையும் ராணுவத்தினரின் பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தின் உள்ளே நடைபெற்ற தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தினுள் 4 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் இணைப்பு
பாகிஸ்தானின் Charsada பகுதியில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்திற்குள் இன்று காலை 9 மணியளவில் திடீரென புகுந்த 4 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், வேதியியல் ஆசிரியர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர், சம்பவ இடத்திற்கு வந்த ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 5 பேர் குண்டுகள் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர், இந்த பல்கலைகழகத்திற்கு பல்வேறு நுழைவுவாயில்கள் இருப்பதால், எளிதில் உள்நுழைந்த தீவிரவாதிகள் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
தற்போது, 100 மாணவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர்.

ad

ad