புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும் : ஜெ. குரு


வன்னியர் சங்க மாநிலத் தலைவரும் பாமக எம்எல்ஏவுமான ஜெ. குரு, பெரம்பலூரில்,  ‘’நாம் விரும்பும் அன்புமணி' என்னும் கையேட்டை திங்கள்கிழமை வெளியிட்ட அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:  பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் தகுதி, திறமை குறித்த தகவல்களை மாநிலம் முழுவதும் வீடு, வீடாக சென்று துண்டறிக்கை மூலம் விநியோகிக்க உள்ளோம்.   234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும். இதில் 120 தொகுதிகளில் வெற்றி பெறும்.

 பாமக ஆட்சியமைக்க தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும். ஆட்சி அமைத்தால், தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த திட்டங்களை 2 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். இல்லாவிடில், பதவியை விட்டு விலகி விடுவோம். 

 ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது.  சென்னையில் நீர்வளப் பகுதிகளான ஏரி, குளம் இருந்த பகுதிகளில் உள்ள கூரை வீடுகளைதான் அரசு அகற்றுகிறது. இதில் பாரபட்சம் காட்டப்படுகிறது’’ என்றார் அவர்.

ad

ad