புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2016

இடர் முகாமைத்துவம் 2 (சர்வோதயம் எதிர் புங்கையின் புதிய ஒளி)


இங்கே வட இலங்கைச் சர்வோதயத்தின் தாயொப்பக் கருணையில் மூச்சுத்திணரும் புங்கையின் புதிய ஒளி.

பள்ளிக்கு போகும், அப்படிப்போய் மண்டையில் ஏதும் ஏறாவிடில் ஏதும் கடையில் போய் நின்று ஓடியாடி உழைக்கும் வயதில் எதற்கு பொதுச்சேவை? நிறுத்திவிடுங்கள் என்று சாம தான பேத தண்டத்துடன் உத்தரவு மேல் உத்தரவு.
போதாக்குறையில் பெற்றோரைக் கூப்பிட்டு பெடியல் பொதுச்சேவையில் இறங்கி , அரசியல் வயப்பட்டு கடைசியில சிறையில போய் கிடக்கப்போறாங்கள். அவங்கள வீட்டை விட்டு வெளியில் போக விடாதியல் என்று அக்கறையான ஆலோசனைகள்.
முக்கியமா இவன் கவியரசனையும் மோகனையும் கயனையும் சேர விடாதீங்க. படிப்பு அல்லது உழைப்பு நாசமாப் போப்போது என்டு ஒரே கரிசனை.
அதனால கவியரசன் மோகன் வெளியில் போனால்
கயனுக்கு சர்வோதயவேலை. கவியும் கயனும் வெளியில் போனால் மோகனுக்கு நேரடி மேற்பார்வையில் சர்வோதயத்துக்கு உள்ள புல்லு பிடுங்கிற வேலை, கயனும் மோகனும் வெளியில போனால் கவியரசனுக்கு வீட்டில வேலை.. அதியுச்ச திட்டமிடலுடன் வழிகாட்டலுடன் தாயின் கரிசனை தொடர்கின்றது.
மூவரையும் இரண்டே மணினேரம் வெளியில் விட்டால் அவங்கள் சிறைக்கு போவதை கடவுள் வந்தாலும் தடுக்க முடியாது என்ட அதியுச்ச பயம்.
அது எப்படியா?
அவங்கள் மூண்டுபேரும் வெளியில 2 மணித்தியாலம் விட்டால் பஸ்ஸைப் பிடிச்சு வேலணைக்கு போய் 6/01/2016 புதன்கிழமை வந்து எடுக்கச் சொன்ன பதிவுசான்றிதழை எடுத்துப் போய் வங்கிக்கணக்கை திறந்து முகப்புத்தகத்தில் போட்டு விட்டால் ,பிறகு பெடியலுக்கு காசு வரவர, பொதுச்சேவை பொதுச்சேவை என்டு திரிந்து மெல்ல அறியாமல் அரசியலுக்க போய் சிறைக்கு போயிருவாங்கள். பிறகு யாரு வீட்டுக்கு உழைச்சுக்குடுக்கிறது என்ட தூரனோக்கு நற்சிந்தனைதான்.
நாங்க சின்னப்பிள்ளைகள், ஒரு டியூசன் சென்டர், ஒரு மாத இதழ், 2000 மரக்கன்றுகளை தெரிவில் வளக்காமல் ஒரே வளவுக்குள் வைச்சு அடுத்த நிர்வாகத்திடம் 2017 இல் குடுத்திட்டு போயிருவம் என்டு நெருப்பில் நீராடி சத்தியம் செஞ்சாலும் இந்த தாய்க்குலம் நம்பினம் இல்ல..
டியூசன் நடத்த வீடு கேட்டு மக்களிடம் போனா , அந்த வீட்டுக்க கிளைமோர் கிடந்தது, ஆமி இப்பையும் அந்த வீட்டை கண்காணிக்கிரான், வீடுக்க போனால் நேர பூஸாதான் என்ட விசயத்தை மாத்திரம் சந்தேகத்துக்கு இடம் இன்றி நம்பினம்.
அவர்களின் வாதம் மிகச்சரியாகத்தான் இருக்குது. நாங்க செய்யிறம் தானே ? நீங்கள் என்ன அதுக்க புதுசா ?
ஒரு வகையில் உண்மைதான் தான். ரெண்டு பேர் ஒரே வேலையச் செய்யக்கூடாது தான். சூழகம் மரம் நட்டா சர்வோதயம் தண்ணி ஊத்தாது. சர்வோதயம் மரம் நட்டு கூடு சரிஞ்சு கிடந்தா சூழகம் அதை நிமிர்த்திக் கட்டாது, சண்முகனாதன் ஐயா செஞ்சா சூழகமும் சர்வோதயமும் நிமிர்ந்தும் பாக்காது.
இப்படிப்பட்ட ஒரு நாசமாப்போன புத்தி எங்களுக்கு இல்லாமல் இருந்து இருந்தால் இன்டைக்கு வாணர் அரங்கும் , சுப்பிரமணியா பள்ளியும் , கண்ணகிக்கோயிலும் மகாவித்தியாலய மைதானமும் வைத்தியசாலையும் ஆலடிப்பிள்ளையாரும், சங்காத்தார் கேணியும் மடத்துவெளி கமலாம்பிகைபள்ளிக்கூடம், இராமனாதன் விளையாட்டு மைதானம், கமலாம்பிகை பள்ளிக்கூடம் தொடங்கி குறிச்சிக்காடு வரைக்கும் பிரதான வீதியின் இரு மருங்கும் மருதும் மலைவேம்புகளும் ஆலும் அரசும் இலுப்பைகளும், பசுமை போத்தியிருக்கும்.
ஊர் வறண்டு கிடந்தாத்தான் எங்களுக்கு மவுசு என்ட ஈனப்புத்தி எங்களிடம் இல்லை, அவை அவையள் ஊரிட்ட பிரட்டின காசை பொக்கட்டில் போடாமல் மண்ணாப்போனாலும் மண்ணில போடட்டும் என்ட நல்ல எண்ணம்தான் பாருங்கோ.
கை கால் உள்ளவன் ஊராரிடம் காசு வாங்கி மரத்தை நட்டா, அதே ஊர்மக்களின் பணத்தில் ஓடும் தண்ணிபௌசர் தண்ணி ஊத்தாது என்பது தான் எங்களின் சித்தாந்தம்.
மண்ணில் அக்கறை கொண்டவர்கள் மண்ணுக்கான தமது பங்களிப்புகள் பற்றிய மீளாய்வை செய்ய வேண்டியகாலம் கனிந்து வரவேனும்.
நாங்க சொல்லுறம் , "சிறு பிள்ளை வேளாண்மை வீடு போய் சேராது, எல்லாம் அந்த அந்த திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றும் இடங்களுக்கு மட்டும் தான் போய்ச்சேரும் , எங்களை நம்பி எங்களை சுதந்திரமாய் இயங்க விடுங்க"
ஒரு மாணவன் என்பவன் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதி நிதி. ஒரு மரத்தை யார் வைத்தார் என்பதை அவன் ஆராயமாட்டான். அது எனக்கான பசுமையான எதிர்காலத்திற்காக என் உறவொன்றின் உறைகுளிரில் உழைத்து மனமுவர்ந்தளித்த அன்பளிப்பு என்பதை உணர்ந்து கொள்வான்.
எல்லா விடயங்களிலும் அவன் சிந்தனை அப்படித்தான் இருக்கும். அதனால் அவர்களை சுதந்திரமாய் இயங்க விடுங்கள். விரைந்து தேடிவரும் உம் முதுமைக்காலத்தில் மரங்களின் கீழ் அமைதியாக காற்று வாங்க விரைவாக அவர்களை சுதந்திரமாய் மரங்களுக்காக இயங்க விடுங்கள்.
களவு, குடி, கொள்ளை, பொறாமை என்னும் பலதும் சமூகத்துக்கு தீயது என்பதை அறிவு ஞானத்தால் அறிந்து ஒரு நற்சமூகம் உருவாக கல்விக்காக அவர்களை இயங்க விடுங்கள்.
நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நல்ல அறிவாளிகள், நல்ல கதை சொல்லிகள் , நல்ல வாசிப்பு ரசனை மிகுந்தவர்கள் பெருகிவர ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்கள் ஒரு மாத இதழ் வெளியிட ஆதரவுடன் சுதந்திரமாய் இயங்க விடுங்கள்.
அடக்கி ஒடுக்காதீர்கள். பெற்றோர் மறித்தால் அவர்களுக்கு நல்ல கருத்தைச் சொல்லி எம்மை சுதந்திரமாய் இயங்க விட வேண்டிய நீங்களே எம்மை சிறையில் அடைத்துப் பூட்டலாமா?
நாம் யாவருக்கும் பொதுவானவர்கள், எமக்கு அரசியல் தெரியாது. நீங்கள் செய்வதெல்லாம் எம் நன்மைக்காகவே என்ற உணர்வோடு யாவருடனும் கைகோத்து பயணிப்போம், எம்மை அடக்காதீர்கள்.
இந்த மாதம் ஒரு புத்தகம் வெளிவரவில்லையாயின்
1.அனைத்து பாடசாலை மாணவர்கள், புத்தகத்தில் பதிப்பதற்கென நல்ல விடயங்களை தேடுவதை நீங்கள் தடுத்து விட்டீர்கள்.
2. கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் மாணவர்கள் மனங்களில் பிறப்பு எடுப்பதை தடுத்து விட்டீர்கள்.
3. புங்குடுதீவின் மாண்புகள் பற்றி இளையோர், பெரியர்களிடம் கேட்டு அறியவேண்டிய பல விடயங்களை நீங்கள் தடுத்து விட்டீர்கள்
.
4. புத்தகம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான தொழில்னுட்பங்களை கற்றுத்தருவதற்கு யாழ் கரிகண்ணன் பதிப்பகத்தார் எமக்கு தந்து இருந்த வாய்ப்புகளை தடுத்து எமது அறிவுத்தேடலை தடுத்து விட்டீர்கள்.
5. நல்ல வரைகலை நிபுணர்கள் மாணவர்கள் மத்தியில் உருவாகுவதை தடுத்து விட்டீர்கள்.
6. புலம் பெயர் மக்கள் எமக்காக செய்திருக்கும் பல நற்காரியங்களை மாணவர்களாகிய நாங்கள் அறிந்து காலாகாலத்திற்கு பதிவு செய்து ஆவணப்படுத்தி வைப்பதை நீங்கள் தடுத்து விட்டீர்கள்.
7.எங்கள் ஊரில் எங்களுடன் வாழும் வயோதிபர்களின் மனக்கிடக்கைகளை பதிவு செய்து அசுத்த் தலைமுறையிடம் கொண்டு செல்வதை தடுத்து விட்டீர்கள்.
8.மக்களும் நாங்களும் உங்கள் மீது வைத்து இருக்கும் நன்னம்பிக்கயை இழக்க வைத்து விட்டிர்கள்.
குறிப்பு.
இந்த பதிவு கூறுவது பொய் எனில் புங்கையின் புதிய ஒளியின் கைவண்ணத்தில் தை மாத இதழ் இம்மாதத்தில் வெளியாக வேண்டும்.
**இடர் முகாமைத்துவம் 1 (ஸ்ரீகரன் பசுபதி(லண்டன்) எதிர் புங்கையின் புதிய ஒளி

ad

ad