புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2016

தமிழகத்தில் 5 அணிகள் போட்டியிடப்போவது உறுதி: ராமதாஸ் பேட்டி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இன்று (ஞாயிறு) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், வரும் தேர்தலில் தமிழகத்தில் 5 அணிகள் போட்டியிடப்போவது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் பாமக தலைமையில் தனித்துப் போட்டி என உறுதி செய்துள்ளோம். இதை பத்திரத்தில் எழுதிக்கொடுக்கக் கூட தயாராக உள்ளேன் என கூறியவர், அருகே உள்ள கட்சிக்காரர்களிடம் பத்திரம் வாங்கி வந்தீர்களா என கேட்டார்.

மேலும் பேசிய அவர், தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் பொதுமக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்துதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மீனவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 9,988 கொலைகளும், 98 ஆயிரத்திற்கு மேல் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படித்தான் சீரழிந்துள்ளது தமிழகம்.

சாதி சங்கங்கள் தேர்தலின்போது ஆங்காங்கே தங்களது கொள்கைகளை முன்னிறுத்தி மாநாடுகளை நடத்துகின்றன. எங்களை பொறுத்தவரை அது தவறில்லை. திமுக மற்றும் அதிமுக தனித்துப் போட்டி என அறிவிக்கவில்லை. நாங்கள் தனித்துப்போட்டி என அறிவித்துள்ளோம். அந்தளவுக்கு நாங்கள் பலமாக உள்ளோம். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளையும் சேர்த்து போட்டியிடுகிறோம். எல்லா கட்சிகளுக்கும் எங்கள் கட்சியே மாற்று அணியாக செயல்படுகிறது என்றார்.

மக்கள் நலக் கூட்டணி என்றவுடன், அப்படி ஒரு கூட்டணி இருக்கா என்றார். பாமக கூட்டணியில் உள்ளது என பாஜக கூறுகிறதே என்ற கேள்விக்கு பதில் கூறாமல் கட்சியினருடன் புறப்பட்டார் ராமதாஸ்.

ad

ad