புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2016

துபாயில் திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் கைது


விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு தப்பி செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்களை துபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் ஆடம்பர வீடொன்றில் இருந்து பல மில்லியன் திர்ஹாம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர்.
இவர்களால் 250,000 திர்ஹாம் பெறுமதியான கடிகாரங்கள், 100ää000 திர்ஹாம் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
விசாரணைகளின் போது குறித்த ஆடம்பர வீடு அமைந்திருந்த இடத்தில் உள்ள எட்டு வீடுகளில் உள்ள பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த ஐவரும் ஆடம்பர வீடுகளுக்கு சென்று அழைப்பு மணியை அழுத்திபார்க்கும் போது குறித்த வீடுகளில் இருந்து எவரும் வெளியில் வராவிட்டால், அந்த வீடுகளின் சுவர்களின் ஊடாக ஏறி கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் குறித்த ஐந்து பேரில் ஒருவர் சுவர் மீது ஏறி வீடுகளுக்கு உள்ளே சென்று வீட்டின் கதவை திறப்பார். இதன்பின்னர் அடுத்த மூன்று பேரும் வீடுகளுக்கு சென்று கொள்ளைகளில் ஈடுபடுவர்.
ஐந்தாமவர், வீடுகளின் வெளியில் இருந்து ஆட்கள் வருகை குறித்த கண்காணிப்பில் ஈடுபடும் வகையிலேயே பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து இலங்கையர்களுக்கும் எதிராக துபாய் வதிவிட கொள்கையை மீறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ad

ad