திங்கள், ஜனவரி 25, 2016

குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் சாகும் வரை தூக்கிலிடுங்கள்! வித்தியா கொலை சந்தேகநபர்கள்புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் இன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த விளக்கமறில் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட சந்தேகநபர்கள் தாங்கள் குற்றவாளிகள் அல்லவெனவும், வீண்பழி சுமத்தப்பட்டு கடந்த 8 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அத்துடன், தம்மிடம் சட்டத்தரணி வைத்துக் கொள்வதற்கான போதிய வசதி இல்லை எனவும் அவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாங்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் பட்சத்தில் சாகும் வரை தூக்கிலிடுமாறும் சந்தேகநபர்கள் நீதிமன்றில்  தெரிவித்துள்ளனர்.