புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2016

உயர்பாதுகாப்பு வலயத்தில் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்: தேடியலையும் மக்கள்

இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பலாலி பிரதேசத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்திய ஒரு சில வீடுகளைத் தவிர ஏனைய வீடுகளுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலிப் பகுதியிலும் ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக ஜே 252, ஜே 253, ஜே 254 ஆகிய கிராம சேவர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பகுதி மக்களுடைய விவசாய நிலங்களாகவே காணப்படுகின்றது.
இருந்த போதும் சிறிதளவு மக்களுடைய குடியிருப்பு காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அங்கிருந்து மக்களுடைய வீடுகள் ஒன்றும் இல்லை.
பெரும்பாலான வீடுகள் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் தமது தேவைகளுக்கான பயன்படுத்திய ஓரிரு வீடுகள் மட்டும் கூரைகள் இல்லாமல் வெறும் சுவர்களுடன் காணப்படுகின்றது.
குறிப்பாக 30 வீடுகள் இருந்த அன்ரணி குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டினைக்கூட இராணுவத்தினர் விட்டுவைக்கவில்லை. அனைத்து வீடுகளும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டுன.
இதனால் பற்றைக்காடாக இருக்கும் அப்பகுதியில் மக்கள், தமது காணிகளை இணங்கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொது மக்கள் தமது பணத்தினை செலவிட்டு பைக்கோவை பயன்படுத்தி தமது காணிகளை துப்பரவு செய்து வருகின்றார்கள்.
இதற்கான செலவினை பிரதேச செயலகம் வழங்கும் என்று உறுதியளித்த பின்பே தமது பணத்தினை செலவு செய்து பற்றைக்காடுகளை அகற்றும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad