புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

கச்சதீவு திருவிழா அனுமதிக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியமாகும் என இராமேஸ்வரம் வருவாய் கோட்டாச்சியர் ராமபிரதீபன் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 20 மற்றும் 21ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

ராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ராமேஸ்வரம் பங்குத்தந்தை, வருவாய்துறை, காவல்துறை கடலோரக் காவல்படை மத்திய உளவுத்துறை, கியூபிரிவு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருத்தல் அவசியமாகும். அதேவேளை, இலங்கை அகதிகளுக்கு அனுமதி கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தடை செய்யப்பட்ட பொலீத்தீன் பொருட்கள், போதைப் பொருட்கள் மற்றும் கடத்தல் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பயணம் செய்வோரின் இறுதிபட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் அரச அலுவலர்கள் முறையான அனுமதியுடன் பயணம் செய்ய வேண்டும்.

அத்துடன், நாட்டு படகுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad