புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2016

மாணவிகள் இறந்த விவகாரம்: சித்த மருத்துவ கல்லூரி தாளாளர் கோர்ட்டில் ஆஜர்




விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்த மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது தொடர்பான வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் 25-ந் தேதி சரண் அடைந்தார்.

பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட வாசுகியை நேற்று போலீசார் பலத்த பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி முன்பு வாசுகியை ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கடலூர் மத்திய சிறையில் வாசுகியை ஒரு நாள் அடைக்கவும், நாளை (அதாவது இன்று) மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து, வாசுகியை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசார் வாசுகியை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, மக்கள் அதிகாரம் என்ற அமைப்பினர் வாசுகிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.மாணவிகள் இறந்த விவகாரம்: சித்த மருத்துவ கல்லூரி தாளாளர் கோர்ட்டில் ஆஜர்

ad

ad