வியாழன், ஜனவரி 14, 2016

கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில்


கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்.
இந்த உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக ஏற்கனவே ஆறு பிரதி அமைச்சுப் பதவிகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் உயர் மட்டத்தினருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பிரதி அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
காலி, இரத்தினபுரி, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிர்வரும் இரண்டு வாரங்களில் பிரதி அமைச்சுப் பதவி பெற்றுக்கொள்ள உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது