புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2016

இமாலய ஓட்டங்களை குவித்தும் இந்திய அணி தோற்க என்ன காரணம்

பெர்த்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு 310 ஓட்டங்களை இலக்காக வைத்தும் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதற்கு சிலவற்றை முக்கிய காரணமாக கூறலாம்.

நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் சிறப்பாக ஆடி 171 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதே சமயம் ஷிகர் தவான் 22 பந்துகளை சந்தித்து 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். உலகக்கிண்ணப் போட்டிக்கு பிறகு தவானின் சொதப்பல் ஆட்டம் இந்த ஆண்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அவர் உலகக்கிண்ணத்திற்கு பிறகு 9 இன்னிங்சிகளில் 293 ஓட்டங்களே எடுத்துள்ளார். அவரது சராசரி 32.55 ஆகும்.
ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 3 அரைசதம் மட்டும் அடித்துள்ளார். இந்த போட்டியில் இவர் ஓரளவு ஓட்டங்கள் எடுத்திருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு கடைசி நேரத்தில் இந்தியா நெருக்கடி கொடுத்திருக்கும்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவின் பந்து எடுபடாமல் போய் விட்டது.
இலங்கை, தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்திய அஸ்வின் தான் 2 விக்கெட்டுகளுடன் அதிக ஓட்டங்களை (68 ஓட்டங்கள்) விட்டுக் கொடுத்தார். அதே போல் ஜடேஜாவும் விக்கெட் ஏதுமின்றி 61 ஓட்டங்களை அள்ளிக் கொடுத்தார்.
அணித்தலைவர் டோனி கூட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இப்படி மிகவும் மோசமான நாளாக இருக்கும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் (149), பெய்லி (112) இருவரும் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். ஆனால் பெய்லி விரைவிலே ஆட்டமிழக்க வேண்டியது.
5வது ஓவரில் பரீந்தர் ஸ்ரன் வீசிய பந்து அவரது கையுறையை உரசிக்கொண்டு லெக்சைடில் சென்றது. அதை விக்கெட் கீப்பர் டோனி பிடியெடுத்தார்.
அப்பீல் செய்த போது, நடுவர் கெட்டில் போரப் (இங்கிலாந்து) அவுட் கொடுக்க மறுத்து விட்டார். ஆனால் ரீப்ளேயில் பந்து கையுறையில் உரசுவது தெளிவாக தெரிந்தது.
நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறை இல்லாததால் இந்திய அணியால் ஏதும் செய்ய முடியவில்லை. நடுவர் பெய்லிக்கு அவுட் கொடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும்.

ad

ad