புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2016

வீமன்­காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதை­மு­காம்­க­ளுக்­கு­ரிய தட­யங்கள் பெரும் பர­ப­ரப்பைஏற்படுத்தியுள்ளது

.வீமன்­காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதை­மு­காம்­க­ளுக்­கு­ரிய தட­யங்கள் பெரும் பர­ப­ரப்பைஏற்படுத்தியுள்ளது

யாழ்ப்­பா­ணத்தில், இரா­ணு­வத்­தி­னரின் பிடியில் இருந்து புதி­தாக விடு­விக்­கப்­பட்ட 701 ஏக்கர் பரப்­ப­ளவு பிர­தே­சத்தில் உள்ள வீமன்­காமம் பகு­தியில், இரண்டு வீடு­களில் காணப்­பட்ட வதை­மு­காம்­க­ளுக்­கு­ரிய தட­யங்கள் பெரும் பர­ப­ரப்பைத் தோற்­று­வித்­துள்­ளன.
அரு­க­ருகே காணப்­பட்ட இரண்டு வீடு­களின் அமைப்­புகள் மாற்­றப்­பட்டு, கூரை­க­ளுக்குக் கீழாக முட்­கம்­பிகள் பொ
ருத்­தப்­பட்­டி­ருந்­ததும், வெளிச்சம் வரும் வழிகள் அடைக்­கப்­பட்டு இருட்­ட­றை­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததும், ஏனைய இரா­ணுவ அதி­கா­ரிகள் கூட நுழையத் தடை­வி­திக்கும் அறி­விப்பு பலகை காணப்­பட்­டதும், அந்த சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருந்­தது.
ஏற்­க­னவே இது­போன்­ற­தொரு வதை­முகாம் தடயம், வர­ணியில் இருந்த 52ஆவது டிவிஷன் படைத்­தளம், மிரு­சுவில் பகு­திக்கு மாற்­றப்­பட்ட பின்­னரும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. ஆனாலும் அது­பற்­றிய தக­வல்கள், படங்கள் தாம­த­மா­கவே வெளி­யா­கின.
அதே­வேளை, அண்­மையில் விடு­விக்­கப்­பட்ட பகு­தி­களைப் பார்­வை­யிடச் சென்ற பொது­மக்கள், வீமன்­கா­மத்தில் இரண்டு வீடுகள், வர­ணியில் இருந்­ததை ஒத்த அமைப்­புடன் இரா­ணு­வத்­தி­னரால் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டி­ருந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.
இது இரா­ணு­வத்­தி­னரின் இர­க­சிய வதை­முகா­மாக இருக்­கலாம் என்ற செய்தி பர­வ­லாக ஊட­கங்­களில் வெளி­யா­கி­யது.
ஆனால், இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர அதனை நிரா­க­ரித்­தி­ருக்­கிறார்.
அது வதை­முகாம் அல்ல, இரா­ணு­வத்­தினர் வதை­மு­காம்­களை வைத்­தி­ருக்க வேண்­டிய தேவை இல்லை என்று கூறி­யி­ருப்­ப­துடன், அது. இரா­ணு­வத்­தி­னரால் பயன்­ப­டுத்­தப்­பட்ட மருத்­துவ ஆய்வு கூடம் என்றும், புலி­களின் தாக்­கு­தலில் இருந்து பாது­காத்துக் கொள்­ளவே, கூரைக்கு முட்­கம்­பிகள் பொருத்­தப்­பட்­ட­தா­கவும் விளக்­க­ம­ளித்­தி­ருக்­கிறார். இரா­ணுவப் பேச்­சா­ளரின் விளக்கம் விந்­தை­யா­ன­தா­கவும், குழப்பம் நிறைந்­த­தா­கவும் உள்­ளது.
அது­மட்­டு­மன்றி, அந்த வதை­முகாம் செய்தி வெளி­யான பின்னர், அங்கு இர­வோடு இர­வாக தட­யங்கள் அழிக்­கப்­பட்டு, வர்ணம் பூசி மறைக்­கப்­பட்­டது ஏன் என்­பது உள்­ளிட்ட பல்­வேறு கேள்­விகள் இருக்­கின்­றன. அதை­விட, பலா­லியில் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கென சகல வச­தி­க­ளையும் கொண்ட ஒரு தள மருத்­து­வ­ம­னையே இருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்க, அதற்கு அருகில் எந்த வச­தியும் இல்­லாத, மின் இணைப்புக் கூட இல்­லாத ஒரு மருத்­துவ ஆய்வு கூடத்தை இரா­ணு­வத்­தினர் வைத்­தி­ருந்­தனர் என்­பது எவ­ராலும் நம்­ப­மு­டி­யாத விடயம்.
புலி­களின் தாக்­கு­தலில் இருந்து பாது­காக்க கூரைக்கு முட்­கம்பி பொருத்­தி­ய­தாக கூறப்­படும் விடயம் அதை­விடப் பெரிய முரண். கூரை வழி­யாகத் தப்­பி­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே, அவ்­வாறு முட்­கம்பி பொருத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும்.
எவ்­வா­றா­யினும், இரா­ணுவத் தரப்பு அதனை ஒரு வதை முகாம் என்று ஏற்கும் மனோ­நி­லையில் இல்லை; அதனால் தான், இந்த தக­வல்கள் வெளி­யா­னதும் எஞ்­சிய தட­யங்கள் எரித்தும், வர்ணம் பூசி மறைத்தும் அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
அதே­வேளை, இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர குறிப்­பிட்­டது போன்று, இரா­ணு­வத்­தினர் வதை­மு­காம்­களை வைத்­தி­ருக்க வேண்­டிய தேவை­யில்லை என்ற கருத்து முக்­கி­ய­மா­னது.
இரா­ணு­வத்­தினர் ஏதோ யாரையும் கைது செய்­யா­தது போன்றும், விசா­ரணை செய்­யா­தது போன்றும், அவ­ரது கருத்து அமைந்­தி­ருக்­கி­றது. இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் எவ்­வாறு நடத்­தப்­பட்­டார்கள், எவ்­வாறு விசா­ரணை செய்­யப்­பட்­டார்கள் என்­பது உல­க­றிந்த உண்மை. வடக்­கிலும், கிழக்­கிலும் மட்­டு­மன்றி, இலங்கை முழு­வ­திலும் உள்ள அத்­தனை இரா­ணுவ முகாம்­களும், ஏதோ ஒரு கால­கட்­டத்தில், கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விசா­ரிக்கும் முகாம்­க­ளா­கவே இருந்­தன.
இரண்டு முறை நடந்த ஜே.வி.பி. கிளர்ச்­சி­களின் போது, கைது செய்­யப்­பட்ட சிங்­கள இளை­ஞர்கள், இரா­ணுவ முகாம்­களில் எவ்­வாறு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­னரோ அது­போலத் தான், முப்­ப­தாண்டுப் போரின் போதும் அதற்குப் பின்­னரும், தமி­ழர்கள் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டனர்.
மூன்று தசாப்த போர்க்­கா­லத்தில், இரா­ணு­வத்­தி­னரின் சுற்­றி­வ­ளைப்­பு­களில் எத்­தனை ஆயிரம் பேர் கைது செய்­யப்­பட்­டனர் என்ற ஒரு கணக்கு கூட இரா­ணு­வத்­தி­ன­ரிடம் இருக்­காது. அது ஆயிரம் அல்ல, இலட்­சங்­களைக் கூட தாண்­டக்­கூ­டி­ய­தா­கவே இருக்கும்.
சுற்­றி­வ­ளைப்­பு­க­ளிலும், தேடு­தல்­க­ளிலும், கொல்­லப்­பட்­ட­வர்கள் போக, பிடித்துச் செல்­லப்­பட்­ட­வர்­களில் பல ஆயிரம் பேர் மீண்டு வர­வே­யில்லை. எனினும், பெரும்­பா­லா­ன­வர்கள் மீண்டு வந்­தனர் என்­பதில் சந்­தே­க­மில்லை. மீண்டும் வந்­த­வர்­களும், மீள­ வ­ரா­த­வர்­களும், இரா­ணுவ முகாம்­களில் விசா­ரணை என்ற பெயரில் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டனர். இரா­ணுவ விசா­ரணை என்­பது சித்­தி­ர­வ­தை­யோடு இணைந்த ஒன்­றுதான். தலை­கீ­ழாக கட்டித் தொங்க விட்டு தாக்­கு­வது, பெற்றோல் பையை தலையில் கட்டி மூச்சுத் திணற வைப்­பது, மண்­நி­ரப்­பிய குழாய்­களால் தாக்­கு­வது, நகங்­களை பிடுங்­கு­வது, தீயால் சுட்டுக் காயங்­களை ஏற்­ப­டுத்­து­வது என்று ஏகப்­பட்ட சித்­தி­ர­வதை வழி­மு­றைகள் கடந்த காலங்­களில் கையா­ளப்­பட்­டன.
ஆட்­சி­மாற்­றத்தின் பின்­னரும் கூட அத்­த­கைய வதைகள் தொடர்­வ­தாக, தென்­னா­பி­ரிக்க சட்ட நிபுணர் யஸ்மின் சூகா தலை­மை­யி­லான சர்­வ­தேச மனித உரிமை அமைப்பு ஒன்று கடந்த வாரத்தில் கூட குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கி­றது. ஒவ்­வொரு இரா­ணுவ முகா­மிலும், பின்­பு­ற­மாக ஒரு இடத்தில் விசா­ர­ணைக்­கூடம் இருக்கும். கைது செய்­யப்­பட்­ட­வர்­களைத் தடுத்து வைத்­தி­ருக்கும் கூடங்கள் இருக்கும். பெரும்­பாலும் ஊர் அடங்கிப் போன பின்னர், இரவு 10 மணிக்கு மேல் தான் அங்கு விசா­ர­ணைகள் தொடங்கும், நள்­ளி­ரவு தாண்­டியும் அந்த விசா­ர­ணைகள் தொடரும்.
இது தான் வடக்கு கிழக்கில் இருந்த இரா­ணுவ முகாம்­களில் நாளாந்தம் நடந்­தது.
இரா­ணு­வத்­தினர் வதை­மு­காம்­களை வைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை என்று இரா­ணுவப் பேச்­சாளர் கூறி­யுள்­ளதைப் பார்த்தால், அவர்கள் யாரை­யுமே பிடிப்­ப­தில்லை, விசா­ரிப்­ப­தில்லை என்­பது போலத் தான் உள்­ளது.
ஆனால், இரா­ணு­வத்­தி­னரின் கையில் அகப்­பட்டு சித்­தி­ர­வ­தை­களை அனு­ப­வித்த ஆயி­ரக்­க­ணக்­கான சாட்­சிகள், எங்­கெங்கு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டனர் என்­பதை வெளிப்­ப­டுத்த தயா­ரா­கவே இருப்­பார்கள்.
படை­யி­னரின் பிடியில் இருந்த பிர­தே­சங்­களில் வாழ்ந்த இளை­ஞர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு இத்­த­கைய வதை­முகாம் அனு­ப­வங்கள் கிடைக்­காமல் போயி­ருக்­காது.
எனவே இரா­ணு­வத்­துக்கு வதை­மு­காம்கள் பற்றி எது­வுமே தெரி­யாது, அப்­படி ஒன்றை அவர்­களை வைத்­தி­ருந்­ததே கிடை­யாது என்ற கதையை தமி­ழர்கள் மட்­டு­மல்ல, சிங்­க­ள­வர்கள் கூட நம்­ப­மாட்­டார்கள்.
இது இரா­ணுவப் பேச்­சா­ள­ருக்கும் கூடத் தெரி­யாத விட­ய­மல்ல.
வீமன்­கா­மத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது அண்­மைக்­கா­லங்­களில் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஒரு வதை முகா­மாக இல்­லா­தி­ருக்­கலாம்.
ஆனால் ஏதோ ஒரு காலத்தில், அது சட்­ட­ரீ­தி­யான தேவை­க­ளுக்கு அப்பால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பதை மட்டும் உணர்த்­தி­யி­ருக்­கி­றது

ad

ad