ஞாயிறு, ஜனவரி 31, 2016

பழ.கருப்பையாவை சந்தித்துப் பேசிய வைகோ
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையாவை சந்தித்துப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது வீடு தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களை தொடர்ந்து விமர்சித்து பேசி வந்ததைத்தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். உடனடியாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக பழ.கருப்பையா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அவரது வீட்டை ஒரு கும்பல் தாக்கியது. அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பழ.கருப்பையாவை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிறு) சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பழ.கருப்பையா வீட்டிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.