புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

சவாலை ஏற்று புகையிரதத்தில் பயணித்தார் இராஜாங்க அமைச்சர் சுஜீவ


கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார உச்சிமாநாட்டில் விடுக்கபட்ட சவாலை சர்வதேச வர்த்தக இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நிறைவேற்றியுள்ளார்.
இந்த மாநாட்டில் எதிர்கால இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிமாக போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அல்பேனிய நாட்டின் நகரபிதா ”பொது போக்குவரத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலமே ஒரு நாட்டை அபிவிருத்தி செய்யமுடியும்” எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் ”அரச அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒரு தடவையாவது ரயில் அல்லது பஸ் போன்ற பொது போக்குவரத்து சேவைகளினூடாக பயனிப்பதன் மூலம் அதில் காணப்படும் குறைகளைக் கண்டு அதை நிவர்த்தி செய்யமுடியும்” எனக் குறிப்பிட்டார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் இந்த பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் இந்த சவாலை அமைச்சர் சுஜீவசேனசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
எனவே இந்த சவாலை ஏற்றுக்கொண்ட இராஜங்க அமைச்சர் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து கண்டியிலிருக்கும் தனது வீட்டிற்கு ரயிலில் சென்றுள்ளார்.

ad

ad