புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2016

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்


யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணிகளை இழந்துள்ள அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் காணிகளை வழங்க அரசாங்கம்
தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 65000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வீடுகளை எதிர்வரும் 3 வருடங்களில் நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அங்கீகாரத்தையும் அமைச்சரவை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள காணிகளிலேயே இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும், இந்த வீடுகள் 550 சதுரஅடி நீளத்தை கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வீடுகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 135000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

ad

ad