புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2016

நீதிப்பொறிமுறையில் சர்வதேச பங்குபற்றுதல் அவசியம்!

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கான நீதி பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

நீதிக்கான கூறுகள் உள்ளடங்கலாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இடைக்கால நீதிப்பொறிமுறை கலந்துரையாடல்கள் தொடர்பில் பான் கீ மூன் புரிதலுடன் உள்ளதாக அவரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாறிக் தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பரந்தளவிலான கலந்துரையாடல்கள் நீதி பொறிமுறையின் மாதிரியை உருவாக்க உதவியாக அமையும் என பான் கீ மூன் கூறியுள்ளார்.

நீதிப்பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு மற்றும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவம் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தையும் பான் கீ மூன் நினைவு கூர்ந்தார்.

இந்த தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் தமக்குள்ள பொறுப்புக்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் என பான் கீ மூன் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவரின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad