புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழில் உயர்மட்டக் கூட்டம்

இராணுவத்தினரின் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஏனைய
மக்களையும் மீள்குடியேற்றுவது தொடர்பான கூட்டம் இன்று (புதன்கிழமை) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, யாழ். அரச அதிபர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரி.எம். சுவாமிநாதன் , அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இது அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பு என்பதால், ஊடகவியலாளர்களுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதுடன், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சந்திப்பின் நிறைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்றைய கூட்டத்தை முன்னிட்டு யாழ் நகரப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ad

ad