சனி, ஜனவரி 23, 2016

யாழ்ப்பாணத்தில் முதல் நில அதிர்வு!: பீதியில் மக்கள்!

யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்குவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தில் பாரிய வெடிப்பு தோன்றியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.   

இன்று அதிகாலை இந்த நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இதனால் வீடொன்றின் சுவர்களுக்கு இடையிலும் வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது.

குறித்த பகுதியில் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பகுதியில் இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவத்தை கேள்வியுற்ற அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.