புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2016

மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட நகல் யோசனைகள் முதலமைச்சரிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பிற்கான நகல் யோசனைகள் இன்று பேரவை இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தியும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உபகுழுவின் உறுப்பினர் தெரிவித்தார்.

கடந்த ஒருமாத காலமாக உபகுழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கல்விமான்கள் புத்திஜீவிகளிடம் பெறப்பட்ட யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார். இன்று கையளிக்கப்பட்ட நகல் யோசனைகளை பேரவை இணைத்தலைவர் விக்னேஸ்வரன் எதிர்வரும் 30ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்கு சமர்ப்பித்து மேலும் கருத்துக்களைப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள், கல்விமான்கள் ஆகியோரிடமும் நகல் யோசனை தொடர்பான மேலதிக விளங்கங்கள் பெறப்பட்டு திருத்தங்கள் செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறு செய்யப்பட்ட திருத்தங்களுடன் நகல் யோசனையின் இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமும் கையளிக்கப்படும்.

ad

ad