புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2016

ஜெயலலிதா என்ன உத்தமரா? பழ.கருப்பையா என்ன தவறாக சொல்லிவிட்டார்? : விஜயகாந்த்



பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை:
’’அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற லஞ்சம், ஊழல் குறித்த உண்மைகளை பேசிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீடு மற்றும் வாகனங்கள் மீது, அதிமுகவை சார்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஆட்சி அதிகாரம் இருக்கிறதென்பதற்காக வன்முறையால் ஒருவரை பணியவைத்துவிடலாம் என பகல்கனவு கண்டுதான் இந்த கொலைவெறித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அவர்களுக்கு எதிராக கருத்து கூறுபவர்களை இதுபோன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்துவதென்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. “ஆளும் கட்சி என்றால் அடாவடி, அதிமுக என்றால் அடிதடி” என அராஜக அரசியல் செய்து, புதிய இலக்கணம் வகுத்து கொண்டிருக்கின்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சகிப்புத்தன்மையே இல்லை என்பது நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் மூலம் ஊர்ஜிதமாகிறது.

ஊழல் என்பது காலம் காலமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தாலும், ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் அது எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாகவும்,  வெளிப்படையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் நடைபெறுகிறது. அதாவது ஊழல் SYSTEMATIC ஆக நடைபெற, ஜெயலலிதாவே காரணமென பழ.கருப்பையா கூறிய குற்றச்சாட்டில் என்ன தவறு இருக்கிறது. ஜெயலலிதா என்ன உத்தமரா? நியாயவாதியா? இல்லை லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டவரா? தமிழக அரசியல் வரலாற்றில் அதிக ஊழல் வழக்குகளை சுமந்த அவரை, பழ.கருப்பையா என்ன தவறாக சொல்லிவிட்டார். “ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற புரட்சி தலைவரின் வரிகளைத்தான் பழ.கருப்பையா பின்பற்றுகிறார். சாதாரண சிறிய விமர்சனத்தைக்கூட தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லாததால்தான், இதுபோன்ற தரங்கெட்ட செயல்களை ஜெயலலிதா செய்து வருகிறார். கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று பழ.கருப்பையா வீட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது நீட்டி, முழக்கி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
 
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும், கூட்டாக லஞ்சம் பெறுகிறார்கள், சாக்கடை இணைப் பிற்கு கூட கவுன்சிலர் லஞ்சம் பெறுகிறார். அதனால் லஞ்ச வரியென அதிகாரபூர்வமாக வரி விதிக்கலாம் என லஞ்சம், ஊழல் குறித்து தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திராணி இருந்தால், பழ.கருப்பையா கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முழு விளக்கம் அளிக்கவேண்டும். இது எதிர்கட்சியை சார்ந்தவர்கள் கூறிய குற்றச்சாட்டல்ல, ஆளும் அதிமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டு.

ஜெயலலிதாவிற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு முதலமைச்சர் என்பதற்காகத்தான் வழங்கப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் அந்த முதலமைச்சரை தேர்வு செய்த சட்டமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லை. “பாம்பின்கால் பாம்பறியும்” என்பதுபோல இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுமென கருதிய பழ.கருப்பையா, தனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டுமென கேட்டும், காவல்துறை பாதுகாப்பளிக்காமல் தனது கடைமையிலிருந்து தவறியுள்ளது. எனவே நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக ஆட்சிமீது ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினரால் சுமத்தப்பட்டுள்ள  ஊழல் குற்றச்சாட்டிற்கு திராணியோடு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ’’

ad

ad