புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

லெபனான் அமைதி காக்கும் கடமைகளுக்கு செல்லவுள்ள இலங்கைப் படையணி

லெபனான் அமைதி காக்கும் கடமைகளுக்காக செல்லவுள்ள, இலங்கையின் 10ஆவது அமைதிகாக்கும் படையணியினர் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

இந்தத் படையணியில் பத்து அதிகாரிகளும் நூற்று நாற்பது பேரும் அடங்குகின்றனர். குறித்த படையணிக்கு லெப்டினன்ட் கேணல் யூ.கே.டி.பி.பி.உடுகம தலைமை தாங்குகிறார்.

குறித்த பணிக்காக புறப்படுமுன் நடைபெறும் படையணி அணிவகுப்பு நேற்று அநுராதபுரம் – சாலியபுர, கஜபா ரெஜிமேன்ட் மத்தியஸ்தானத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த அமைதிகாக்கும் படையணி, ஒரு வருட காலத்திற்கு லெபனானில் சேவையில் ஈடுபடுமென இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

ad

ad