புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2016

கூட்டமைப்பினரின் இணைத்தலைமையிலான முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம் நாளை

ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடமாகாணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலமையின் கீழ் நடைபெறும் முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் முல்லை. கரைதுறைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நாளை இடம்பெறவுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் இணைத்தலைமையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் நடைபெற்றுவந்தன.

எனினும் நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த நியமனம் இடம் பெற்றதன் பின்னர் முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நாளை முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இணைதலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக விசேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு விவசாய நிலங்கள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு பின்னர் அந்தக் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் நிலங்களையே பகிர்ந்தளிக்க முயற்சிக்கப்படுகின்றமை தொடர்பிலும் இந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பேசப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை மாலை இடம்பெறவுள்ளதுடன் கிளிநொச்சி மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்கள் 28 ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad