ஞாயிறு, ஜனவரி 31, 2016

சி.எஸ்.என். நிறுவன மோசடி! விளக்கமறியலில் வைத்தே விசாரணையை முன்னெடுக்க முடிவு


சி.எஸ்.என். ஊடக நிறுவனம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விளக்கமறியலில் வைத்துக் கொள்வது குறித்து பொலிஸ் தலைமையகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்காமல் சில விசாரணை நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது எனவும் தலைமையகம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
கோல்டன் விளையாட்டு வலையமைப்பு (சி.எஸ்.என்.) ஊடக நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற நிதிப் பயன்பாடு, அரச சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் படி, வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் இந்த அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளது.
இவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.