புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க பிரதமர் மறுப்பு

யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை சிறிலங்கா படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.அந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகவே நிராகரித்துள்ளார்.

பலாலி விமானப்படைத் தளத்தின் ஓடுபாதைக்கு நெருக்கமாக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் இருப்பதாகவும், பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டங்கள் இருப்பதால் அதற்கு துறைமுகப் பகுதி அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தவேளையில் குறுக்கிட்ட இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்த்தன, கட்டுநாயக்க  விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கடலேரியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.விமானங்கள், தரையிறங்குவதற்கும், மேலெழுவதற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை முன்வைத்தார்.இதயனையடுத்து, காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

                            

13

ad

ad