புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

பாரிஸ் தாக்குதல் தீவிரவாதி பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிப்பு: கைரேகை மூலம் துப்பு துலங்கியது

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130
பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சாலாஹ் அப்தெஸ்லாம் என்பவர். இவர் போலீசாரின் பிடியில் சிக்காமல் பெல்ஜியம் நாட்டில் ஒளிந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சலாஹ் அப்தெஸ்லாம் புரூஸ்செல்ஸ் நகரில் உள்ள பிளாட் ஒன்றில் இருந்ததை பெல்ஜியம் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

ad

ad