புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

சட்டத்தரணிகள் உடையில் வந்து நீதிமன்றத்தில் மூக்குடைப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல!


சட்டக்கல்லூரி பக்கமே தலைவைத்துப் படுக்காத கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் உடையில் வந்து மூக்குடைப்பட்டுள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வாளர்கள் அண்மையில் ஹோமாகமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அதன் போது ராணுவப் புலனாய்வாளர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஹோமாகம நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன் போது சமூகமளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சட்டத்தரணிகளுக்கான கறுப்பு அங்கி மற்றும் டை அணிந்து காணப்பட்டுள்ளார். அவருக்கு அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் கெஹலியவும் சட்டத்தரணிகள் போன்று கறுப்பு டை மற்றும் கோட் சூட்டுடன் காணப்பட்டுள்ளார்.
இதனைக் கண்ட கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கெஹலியவும் ஒரு சட்டத்தரணி என்றே கருதியுள்ளனர்.
எனினும் சற்று நேரத்தில் அங்கு வருகை தந்திருந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, கெஹலியவின் மானத்தை வாங்கியுள்ளார்.
''மச்சான் நீ எப்போ சட்டத்தரணி ஆனாய்? உனக்குத்தான் சட்டக்கல்லூரி இருக்கும் திசையில் தலை வைத்துப் படுத்த அனுபவம் கூட இருக்காதே, அப்படியிருக்க எதற்கு இந்த கெட்டப்? '' என்று திலும் அமுனுகம காலை வாரிவிடவும் கெஹலிய கடும் அவமானத்தை எதிர் கொண்டுள்ளார்.
பின்னர் அதற்கு பதில் கூறிய கெஹலிய இல்லை வீட்டில் வேறு டை கிடைக்கவில்லை, அதனால் தான் அவசரத்துக்கு இதனை அணிந்து வந்தேன். என்று சமாளிக்க முயன்று தோற்ற கெஹலிய,  மற்றவர்களுடன் பேசுவதை தவிர்த்துக் கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்ற

ad

ad