புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

தெற்காசியாவின் சம்பியனானது இந்தியா

india_win1தெற்­கா­சியக் கால்­பந்து சம்­பி­யன்ஷிப் தொடரின் சம்­பியன் பட்­டத்தை இந்­தியா வென்­றது. நேற்­று­முன்தினம் நடை­பெற்ற இறு­திப்போட்­டியில் ஆப்­கா­னிஸ்­தா­னுடன் மோதிய இந்­தியா 2–1 என்ற கோல்கள் கணக் கில் ஆப்­கா­னிஸ்­தானை வீழ்த்தி வெற்­றி­பெற்­றது. இந்த சம்­பியன் பட்­டத்­துடன் 7ஆவது முறை­யாக இந்­தியா சம்­பி­யனா­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­வேளை 12 ஆவது தெற்­கா­சியக் கால்­பந்து சம்­பி­யன்ஷிப் தொடரை நடத் தும் வாய்ப்பு பங்­க­ளா­தே­ஷிற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. கடந்த இரண்டாம் திகதி நடை­பெற்ற சாவ் நிர்­வாகக் குழு கூட்­டத்­தி­லேயே இம்­மு­டிவு எட்­டப்­பட்டுள்­ளது. சாவ் தலை­வ­ரான காசி சலா­வூதீன் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளா­த­தினால், பிரதி தலை­வ­ராக செயற்­பட்ட இலங்கை கால்­பந்து சம்­மே­ள­னத்தின் முன்னாள் தலை­வரும் தற்­போ­தைய ஊடக மற்றும் தொடர்­பாடல் அதி­கா­ரி­யு­மான ரஞ்சித் ரொட்­ரிகோ கூட்­டத்தை வழி­ந­டத்­தினார்.
இதில் பல தீர்­மா­னங்கள் எட்­டப்­பட்­டுள்­ளன. அதன்­படி மக­ளி­ருக்­கான தெற்­கா­சியக் கால்­பந்து சம்­பி­யன்ஷிப் தொடர் எதிர்­வரும் ஆகஸ்ட் மற்றும் செப்­டெம்பர் மாதங்­களில் இந்­தி­யாவில் நடை­பெ­றவிருக்­கி­றது. அத்­தோடு 2017ஆம் ஆண்­டுக்­கான தெற்­கா­சிய கால்­பந்து போட்­டி­களை பங்­க­ளாதேஷ் நடத்­து­கி­றது. அதே­வேளை நடைபெற்றுமுடிந்த தெற்காசியகால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பிரதம விருந்தினராகவும் ரஞ்சித் ரொட்ரிகோ கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad