புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2016

பொன்னாடையிலும், பூமாலையிலும் பொல்லாப்பை தேடிய விசேட அதிரடிப்படையினர்

யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அம்மனுக்கு செலுத்தும் மாலை முதல் விருந்தினருக்கு அணிவிக்கும் பொன்னாடை வரை சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. 

தேசிய பொங்கல் விழா, யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி ஸ்ரீ இராஜஇராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது.  இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிலையில் பிரதமர் மட்டும் கலந்து கொண்டார். 

இந்நிலையில், ஆலய வழிபாட்டுக்கு மக்களால் எடுத்துச்செல்லப்பட்ட மலர் மாலையில் இருந்து விருந்தினர்களுக்கு அணிவிப்பதற்கான பொன்னாடை வரை அனைத்தும் விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்குட்படுத்தபட்டதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

நேற்று மாலையில் இருந்து பாலலி வீதி, காங்கேசன்துறை வீதி ஆகியன விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. எவ்வாறாயினும்,  தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகை தினம் என்பதால் மக்கள் பொருள் கொள்வனவில் அதிகம் ஈடுபட்டிருந்த நேரத்தில், இவ்வாறு விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் வீதிகளில் குவிக்கபட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை மக்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியது.
                                                          

ad

ad