புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

நடிகர் சிம்பு ஜாமீன் பெற எந்த தடையும் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

’பீப்’ பாடல் தொடர்பான வழக்குகளில் நடிகர் சிம்பு கீழ்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பீப் பாடல் தொடர்பான வழக்குகளில் இருந்து தனக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சிம்பு தரப்பு வழக்கறிஞர் முத்துக் குமாரசாமி வாதிட்டார்.
அவர் தனது வாதத்தில், சிம்பு மீது பதியப்பட்ட அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடியவை.
அவர் தனிப்பட்ட முறையில் ‘பீப்’ போட்டு பாடிய பாடலை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடவில்லை.
அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டுள்ளார்.
அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி வாதாடியுள்ளார்.
அவர் கூறுகையில், ’பீப்’ என்ற ஒலி வரும் இடத்தில் உள்ள விடுபட்ட வார்த்தை, என்ன என்பதை எல்லோராலும் கேட்க முடிகிறது.
அது பெண்களை ஆபாசமாக கொச்சைப்படுத்தியுள்ளது. இப்பாடலை எழுதியது, பாடியது, உருவாக்கம் செய்தது எல்லாமே சிம்புதான்.
எனவே, பாடல் எப்படி இணையத்தில் வெளியானது என தெரியாது என்று அவர் கூறுவதை ஏற்கமுடியாது.
மேலும், அவரிடம் குரல் பதிவு சோதனை நடத்த வேண்டியது அவசியம் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என வாதிட்டுள்ளார்.
நீதிபதி கூறுகையில், இந்த வழக்குகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டவை என்பதால், சம்பந்தப்பட்ட கீழ் நீதிமன்றத்தை அணுகி சிம்பு ஜாமீன் கோர எந்த தடையும் இல்லை.
வரும் 11-ம் திகதி அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பெண் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இனி சிம்பு பெண்களை மதித்து நடக்க வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
பின்னர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தோம்.
இந்த வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது, தர்மம் வென்றிருக்கிறது.
மேலும், எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கும், தமிழக மக்களுக்கும், சிம்பு ரசிகர்களுக்கும், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ad

ad