புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2016

போலீசில் ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு புதிய மனுஅவகாசம் அளித்தது ஐகோர்ட்

 
நடிகர் சிம்பு போலீசில் ஆஜராக கால அவகாசம் அளித்தது ஐகோர்ட்.

பீப்’பாடல் விவகாரத்தால் கோவை மற்றும் சென்னை போலீசார் சிம்பு மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சிம்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிம்பு மீது போடப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளுக்கு முன் ஜாமீன் தேவையில்லை என்றும், அவை ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்பதால், சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். மேலும், சிம்பு ஜனவரி 11–ந்தேதி அன்று விசாரணைக்காக சென்னை போலீசில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

சிம்பு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே கமிஷனர் அலுவலகத்தில் இன்று சிம்பு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், போலீசில் ஆஜராக அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை சிம்பு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.  விசாரணைக்கு பின்னர் சிம்வுக்கு கால அவகாசம் அளித்தது ஐகோர்ட்.’பீப்’பாடல் விவகாரத்தால் கோவை மற்றும் சென்னை போலீசார் சிம்பு மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சிம்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிம்பு மீது போடப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளுக்கு முன் ஜாமீன் தேவையில்லை என்றும், அவை ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்பதால், சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். மேலும், சிம்பு ஜனவரி 11–ந்தேதி அன்று விசாரணைக்காக சென்னை போலீசில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

சிம்பு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே கமிஷனர் அலுவலகத்தில் இன்று சிம்பு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், போலீசில் ஆஜராக அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை சிம்பு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

ad

ad