புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2016

தேசியப் பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் : தென்னாபிரிக்க உயர்தானிகருடனான சந்திப்பில் சம்பந்தன் வலிறுயுத்து!

தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அந்த தீர்வானது அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். 

தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் ஜெப் டொஜ் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். அந்தச் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது உத்தேச அரசியல் யாப்பு மற்றும் நல்லிணக்கம் உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பொறுப்புக்கூறல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் - இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலக முடியாது எனவும் அந்த பிரேரணையிலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் அப்படியே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அந்த தீர்வானது அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மேலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் அக்கறையுடன் இருப்பதாகக் கூறிய உயர் ஸ்தானிகர் தென்னாபிரிக்கா அரசானது இந்த விடயம் தொடர்பில் எந்த வேளையிலும் தனது ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார் . நல்லிணக்கம் தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவங்கள் இலங்கைக்கு அவசியமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இங்கு தெரிவித்தார். 

                                                   

ad

ad