புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2016

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் மீது பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்க இருந்த விசாரணையை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுவித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதா, கர்நாடக அரசு, க.அன்பழகன் தரப்பில் ஏற்கனவே பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணை தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், ஜெயலலிதா மற்றும் கர்நாடக அரசு சார்பில் காலஅவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் பிப்ரவரி 23ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. 

ad

ad